சென்னையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
முருகப்பெருமான் குமரக்கடவுளாக எழுந்தருளிய தலம். எனவே குமரக்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கும், காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சி தருகின்றார். இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்த இலிங்கம் தேவசேனாதிபதீச்சரலிங்கம் என்ற பெயருடன் விளங்குகின்றது. கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம் இந்த தலத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
வைகாசி விசாக பிரம்மோற்சவமும், கந்தர் சஷ்டிப் பெருவிழாவும் முக்கிய திருவிழாக்கள். |